Step into an infinite world of stories
4.3
Self-help & Personal development
இன்றைக்கு இலட்சக்கணக்காண மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஒரு சர்வதேச இளம் தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு. உதயசான்றோன், இவர் சிந்தனை சிற்பி உயர் திரு. உதயமூர்த்தி அவர்களின் மாணவர், ஆயித்துக்கும் மேற்பட்ட தலை சிறந்த நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்னணி பயிற்சியாளர்.
முன்னணி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பெரும் திறன் படைத்தவர். மனிதவளப் பயிற்சி வரலாற்றில் முதல்முறையாக 18 தலைப்புகளில் 72 மணி நேரம் தொடர்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கி சாதனை படைத்தவர்.
பயிற்சியாளர் என்ற முகத்தையும் தாண்டி சமூக சேவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கிவருகிறார்.
தமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய சிந்தனையாளர் எம். எஸ். உதயமூர்த்தியிடம் 1996 – 2013 வரை 17 ஆண்டுகள் நட்புடன் பழகிய நல்மாணவர்.
ஒரு மாணவராக ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தியை எடுத்த நேர்காணல் இணைப்பு you tube ல் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற உலக நாடுகளுக்குச் சென்று பயின்றதோடு பயிற்சி அளித்த அனுபவமும் கொண்டவர்.
எம்.பி.ஏ., பட்டதாரியான உதயசான்றோன், மனித வளம் குறித்து பிஎச்டி ஆய்வில் பட்டம் பெற்றவர்.
பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் உதயசான்றோனின் பேட்டிகள், நம்பிக்கை உரைகள், மனநலம், நம்பிக்கை தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் பயிற்சிகளை வழங்குகிறார்.
‘எண்ணங்கள் தரும் அபார வெற்றி’, 'வெற்றிக்கு 16' என்ற வெற்றிகரமான நூலின் ஆசிரியர். 'உங்கள் எண்ணங்கள் தரும் அபார வெற்றி', 'நம்புங்கள், நீங்களும் கோடீஸ்வரர்தான்', 'உறுதியான வெற்றியை தரும் நேர மேலாண்மை' என்கிற மூன்று ஒலிப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
இவரின் தொடர்புக்கு +91 91711 71473, udhayasandron@gmail.com
Release date
Audiobook: September 24, 2020
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International