ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.3
ศาสนา&จิตวิญญาณ
2005-ம் வருடம் வரை, எனது தொழில் தொடர்பான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதும் அனுபவம் மட்டுமே எனக்கு உண்டு. தமிழில் எனக்கு ஆர்வம் உண்டு என்பதையும், அவ்வப்போது மனதில் தோன்றியதை, நான் அறிந்த நடையில், கவிதை வடிவில் எழுதுபவன் என்பதையும் எனது உற்றமும், சுற்றமும் அறிவார்கள். அவை தவிர, கட்டுரைகள் என்று பெரிதாக எதுபற்றியும் நான் எழுதியிருக்கவில்லை. ஆனால் எனது வேலையில் இருந்து நான் ஒய்வு பெற்ற சில வருடங்களில், “தமிழ் ஹிந்து” இணைய தளம் ஆன்மிகக் கட்டுரைகளைத் தமிழில் வெளியிட்டதைப் பார்த்து, நாமும் நமக்குத் தெரிந்ததை எழுதலாமே என்று தோன்ற, அவர்களும் நான் எழுதியவைகளைத் தொடர்ந்து பதிக்க, எனக்கேற்பட்ட எழுத்தார்வம் மேலும் அதிகமாயிற்று.
அவ்வாறு பல கட்டுரைகள் உயிர்பெறத் தொடங்கின. அவைகளில், சில தொடர் கட்டுரைகள் நூலாகவும் பதிக்கப்பட்டுப் பின்னர் வெளியிடப்பட்டன. எனது படைப்புகளைப் படித்த சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க, சில ஆங்கில நூல்களை மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிடும் வாய்ப்புகளையும் நான் பெற்றேன். அவை அனைத்துக்கும் முதலாக விளங்கி, அதற்கான ஊக்கமும் வழங்கிய “தமிழ் ஹிந்து” இணைய தள நிர்வாகிகளுக்கு நான் எவ்வளவு முறை நன்றி கூறினாலும் போதாது.
சுமார் 1967-ம் ஆண்டு முதலே, எனக்குத் திருவண்ணாமலை தவச்சீலர் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் படைப்புகளிலும், அவரது வழிகளிலும் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் 1971-ம் ஆண்டு முதல் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைக் கட்டுரைகளாக முதலில் எழுதத் தொடங்கினேன். அவ்வாறு 2009-2010 ஆண்டு காலகட்டத்தில், “தமிழ் ஹிந்து” இணைய தளத்தில் பதிக்கப்பெற்ற சில கட்டுரைகளைத் தொகுத்து, ஒரு நூலாக வெளியிடும் ஆர்வம் தற்சமயம் எனக்குத் தோன்றியது. இந்தக் கட்டுரைகள் எழுதும்போதும், அவைகளை நூலாகத் தொகுக்கும்போதும் பல வழிகளில் பொறுமையுடன் இருந்து எனக்கு உதவிய எனது மனைவி திருமதி. சாரதா ராமன் அவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள்.
இந்த நூலைப் படித்து அதனால் பயன் பெறும் வாசகர்கள், அந்த மகரிஷியையே தன்னிடம் ஈர்த்து, தனது மலைச்சாரலில் தங்க வைத்து, அவரது வாழ்நாள் முழுதும் அவரைத் தனது மடியில் இருத்தி வைத்துக் காத்து, இறுதியில் அவரது உயிரை ஒளிமயமாக்கித் தன்னுடன் ஐக்கியப்படுத்தி, உலகோர்க்கு அவரே அண்ணாமலையார் என்றும், அவர் போல் எவரும் வாழ்ந்து காட்ட முடியும் என்பதையும் தெளிவுபடுத்திய அந்த அண்ணாமலையாருக்கே அவர்கள் நன்றி கூறவேண்டும்.
வணக்கம்.
எஸ். ராமன்
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 5 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย