Step into an infinite world of stories
5
Religion & Spirituality
நான் கேள்விப்பட்டவரை, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் மதுரையிலிருந்து திருவண்ணாமலை அடைந்தபின் வேறெந்த ஊருக்கும் தன் பூத உடல் கொண்டு சென்றதில்லை. சூக்ஷ்ம உடல் கொண்டு சென்னை அருகே திருவொற்றியூர் சென்றதையும், அவருக்கே தெரியாது ஏதோ அதிசயம் நடந்தது போலத்தான் சொல்லியிருக்கிறார். அங்கு ரமணர் வந்ததை, அவரது சீடரான கணபதி முனியும் உறுதிப்படுத்திருக்கிறார். அதேபோல அவர் எவருடைய வீட்டிற்கும் தன் இச்சை கொண்டு சென்றதில்லை. ஒரு முறை வலுக்கட்டாயமாக வண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
ஒரே ஒரு முறை தவிர அவர் வெளியே எங்கு சென்றும் உபன்யாசம் செய்ததாகக் கேள்விப் பட்டதில்லை. சில அன்பர்களுடன் ஒரு முறை கிரி வலம் சென்று கொண்டிருந்தவர் ஈசான்ய மூலையில் உள்ள ஈஸான்ய தேசிகர் மடத்தின் பக்கம் வந்தார். அங்கு பிரவசனம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ரமணர் வருவதைப் பார்த்ததும், அங்கிருந்தோர் மிகவும் வற்புறுத்தி வேண்டிக்கொண்டதால் பகவத் கீதையைப் பற்றி ஒரு சொற்பொழிவு கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதேபோல, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் படைப்புகளில் வெகுச் சிலவே அவருக்காகத் தோன்றி அவர் எழுதியது. மற்றவை எல்லாமே யாராவது ஒரு அன்பர் அவரிடம் விளக்கம் கேட்டதாலோ, அல்லது வேண்டிக்கொண்டதாலோ உருவானவைகள் தான். ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ரமணரிடம் கேட்டதன் பலனாகவே நமக்கு அவரது பகவத்கீதாசாரம் கிடைத்தது.
மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதையின் சாராம்சத்தை விளக்குவதாக மட்டும் அல்லாது, ரமணர் போதிக்கும் "நான் யார்?" எனக் கேட்டு ஒருவன் ஆன்ம விசாரம் செய்வதன் நோக்கத்தையும், முறையையும், பலனையும் விளக்குவதாக அது அமைந்துள்ளது. பகவத் கீதையின் வெவ்வேறு அத்தியாயங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னுக்குப் பின் கோர்க்கப்பட்டிருந்தாலும், அந்தக் கோவையில் ஒரு முறையையும், அழகையும் காணலாம்.
Release date
Audiobook: 3 September 2022
English
Singapore