Step into an infinite world of stories
நிலா வெளியில் இது முத்துலட்சுமி ராகவன் ஆகிய நான் எழுதிய முதல் கதை. ஒரு அத்தியாயத்தின் முடிவில் வரும் வார்த்தையை கொண்டு அந்தாதி பாணியில் அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கும்.
கிராமத்தில் உடம்பு சரியில்லாமல் இருந்த அத்தையை பார்க்க சென்ற பெற்றவர்கள் அழைத்துவரச் சொன்னதாக சொல்லி காருடன் வருகிறார் காயத்ரியின் பெரியப்பா.
இவளும் அவருடன் கிளம்பிச் செல்கிறாள். இரவு நேர பயணம் விடியும்போது கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலைக்கோயிலில் கார் நிற்கிறது. மலை ஏறிச் சென்றால் அங்கே கோவிலில் உறவினர்களும் காயத்ரியின் பெற்றோர்களும் இருக்கிறார்கள். காயத்ரியை அவசரமாக அழைத்துச் செல்லும் காயத்ரியின் அம்மா அவளை குளிக்க வைத்து பட்டுப் புடவை நகைகளை போட்டு விட்டு மணப்பெண் போல அலங்காரம் செய்து அழைத்துச் சென்று மணவறையில் காத்திருக்கும் மாப்பிள்ளையின் அருகில் உட்கார வைக்கிறார். என்ன நடக்கிறது என்று காயத்ரி உணர்வதற்குள் அவள் கழுத்தில் தாலி ஏறிவிடுகிறது. தாலி கட்டியவனை அப்போதுதான் முதன்முதலாக பார்த்து யார் நீ என்று அடையாளம் பார்த்து அதிர்ச்சியுடன் விழிகளால் வினவுகிறாள் காயத்ரி. அவன் யார் என்று அவளுக்கு தெரியவில்லை. நிலாவெளியில் நடப்பதைப் போன்ற இதமான சுகானுபவம் தரும் கதை இது
Release date
Ebook: 11 January 2021
English
Singapore