Step into an infinite world of stories
நம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், இம்மண்ணில் வீரத்துடன் சிந்திய புனித ரத்தத்தையும், தாய் நிலத்திற்காக, உயிரையும் சேவையையும் தன்னலமின்றி அர்ப்பணித்த அந்தத் தூய வெள்ளை உள்ளங்களையும்.... காலச்சக்கரத்தின் சுழற்சியில், மறைந்து போனாலும், மறந்து போகாத அம் மாமனிதர்களின் இன்றியமையாத பங்களிப்பையும்.... பசுமையாய், மூவர்ணங்களாய் பிரதிபலித்து… பல தியாகிகளின் மனைவியர் இழந்த தாலிக்கொடியை இச்சமூகத்திற்கு நினைவு படுத்தியபடி...
இன்றும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது. நம் தேசியக்கொடி! அந்த உன்னதக் கொடியின் படபடப்பு.... உங்களின் இதய ஒலியாய்.... உங்களைப் போன்ற தியாகிகளின் உயிர்த்துடிப்பாய் என்னுள் கேட்கிறது!
இனிவரும் இளைய சமுதாயம்.... சுதந்திர வேள்விக்காக நாம் கொடுத்த விலையை உணர்ந்து பயணித்தால், அதுவே மிகப் பெரிய வெற்றியாகும். ஜெய்ஹிந்த்!
- உமாபாலகுமார்
Release date
Ebook: 3 January 2020
English
India