Step into an infinite world of stories
2
Short stories
வணக்கம்!
இது என்னுடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பு. இது நவரசங்களை உள்ளடக்கிய ஒன்பது சிறுகதைகளை கொண்டுள்ளது.
மருமகளை வரதட்சனைக்காக தாய்வீடு அனுப்பிய பின் மனம் தெளிகிற மாமியாரின் தை மாதப் பூவாசமாய்.......
அக அழகை விரும்பிய சட்டத்துறை காவல்துறையைக் கைது செய்த விசித்திர காதலாய் கண்மணியே....யெனும் கானமாய்......
மாமியின் அன்பை சந்தேகிக்கும் மகளை வழிப்படுத்தும் தாயின் வாழ்வு உன் பக்கமாய்......
ரத்தவாடையை முகர்ந்த சுறாக்கூட்ட உறவுக்கிடையே சிக்காது வழுக்கிவரும் மீனின் நிறம் மாறும் முகமாய்.....
உடலுறுப்பையே தந்து கௌரவம் பார்க்கும் மூதாட்டியின் கர்வமறுத்த சாயங்கால உதயமாய்.....
களங்கப்பட்டவளை ஏற்க மறுதளிக்கிற கணவனுக்கு புரிதல் தரும் விதமான களங்கமில்லா நிலவாய்..... புதிய கீதோபதேசமாய்....
பிரம்மன் செய்த பிழையால் சிலுவை சுமக்கும் இருளில் மினுங்கும் வெளிச்சப்பூவாய்....
தாய்மாமன் பெருமை கூறும் தாய்மாமன் சீராய்...உங்கள் கையில் தவழ்கிறது இந்த நூல்.
உறவுகளின் மேன்மையை பட்டு ஜரிகையாய் நெய்திருக்கிறேன். வாசித்துவிட்டு சொல்லுங்களேன்.!
Release date
Ebook: 27 June 2022
English
India