Step into an infinite world of stories
Fiction
பிரியத்துக்குரிய வாசக நண்பர்களே!
‘சாயங்கால மேகங்கள்’ என்ற இந்நாவலின் கதாபாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள். மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்து விட முடியாது தான்.
ஆனால் அப்படிக் குணமுள்ளவர்களை நம்மோடு நம் பக்கத்திலேயே எப்போதாவது பார்க்க முடியவும் முடிகிறது. பயனடையவும் இயலுகிறது.
ஒரு கதை அல்லது நாவல் என்பதனை விட இதை ஒருவகையில் நமது ‘சமகாலத்து வாழ்க்கைச் சித்திரம்’ என்றே உங்களுக்கு நான் அறிமுகப் படுத்திவிடலாம். தற்செயலாக ஒரு கதையாகவும் வாய்த்திருக்கிறது. அவ்வளவு தான்.
அறியாமையும் சுயநலமும் பதவி-பணத் தாசைகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பேயாகப் பிடித்து ஆட்டுவதால் நாமும் அதனால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை.
'மன்னாரு’ மாஃபியா போன்ற மாஃபியாக் கும்பலிலிருந்து சமூகத்தையும், தனிமனிதர்களையும் காப்பாற்றப் பூமியும் சித்ராவும் மட்டுமில்லாமல் நாமும் கூடச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது.
கதையில் அவர்கள் போராடுகிறார்கள், வாழ்வில் நாம் போராடுகிறோம். வித்தியாசம் அதுவே.
சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறி விட்டது. இனி அவற்றைத் துணித்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும், மனத்தாலும் முடியாதபோது-உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே ‘பூமி’ இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழமுடியாது. வீரர்களே வாழமுடியும்.
Release date
Ebook: 5 February 2020
English
India