Step into an infinite world of stories
4.4
Biographies
காந்தியடிகளே இந்நூலிற்கு முன்னுரை எழுதியுள்ளார். தன்னுடன் எரவாட சிறையில் இருந்த சேத் ஜெர்மதாஷ் அவர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே இச்சுயசரிதையை எழுத முனைந்ததாகக் குறிப்பிடுகிறார். இது போன்ற சுயசரிதைகளை எழுதுவது மேலை நாடுகளில் இருந்துவந்த பழக்கமாகும், கீழைநாடுகளில் முற்றிலுமாக இப்பழக்கம் இல்லை என்றும் நண்பரின் யோசனையை எண்ணிப்பார்த்தது குறித்தும் குறிப்பிடுகிறார். தமது எண்ணங்கள் பிற்காலத்தில் மாற நேரலாம் என்ற போதிலும் சத்தியத்துடன் தம் வாழ்வில் செய்த சோதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்னும் எண்ணத்திலேயே இன்னூலை எழுத முனைந்ததாகக்குறிப்பிடுகிறார். இந்நூலில் தாம் செய்த ஆன்மீக மற்றும் நன்னெறி குறித்த சோதனைகளைப் பற்றியே குறிப்பிட விரும்புவதாகவும் அரசியல் குறித்து குறிப்பிட விரும்பவில்லை எனவும் தெளிவாக விளக்கியுள்ளார். சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூலுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.
© 2021 Storyside IN (Audiobook): 9789354837487
Translators: Venkadarajulu
Release date
Audiobook: 2 October 2021
English
India