Step into an infinite world of stories
4.5
Fantasy & SciFi
1987-னில் நான் இந்தியன் எஸ்பிரஸில் பணியில் சேர்ந்தபோது, எனது எடிட்டோரியல் துறையின் தலைவர் மாஸ்டர்ஜி என்று அழைக்கப்படுகிற, சி பி சேஷாத்திரியும், தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமனும் அன்றாடம் உணவு இடைவேளையின் போது, அரசியல், சரித்திரம் போன்ற விஷயங்களை அலசிக் கொண்டிருப்பார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது எப்படி தான் தனியாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை கொண்டு வந்தேன் என்று என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார் மாஸ்டர். என்னை அப்போது பாரின் (வெளிநாடு) டெஸ்க்கில் போட்டிருந்ததால், எனக்கு அன்றாடம் காலை பொழுது பணிதான்
எனவே, மாஸ்டர்ஜியுடன் அதிகம் பொழுதை கழிப்பேன். பல விஷயங்களை கூறுவார். தினமணியில் பணிபுரிந்த ஜெ பி ரோட்ரிகஸ் என்பவரை பற்றியும், அவர் சத்தியமூர்த்திக்கு எவ்வளவு நெருங்கியவர் என்பதையும் கூறுவார். எனவே அந்த ரோட்ரிகஸை பற்றி நிறையவே விஷயங்களை சேகரித்து வைத்திருந்தேன்.
ஒரு நாள் ஜெயலலிதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த ரொட்ரிகஸ் தான் நடிகர் சந்திரபாபுவின் அப்பா என்று கூறினார். அதன் பிறகு சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய தகவல்களை சேகரிக்க துவங்கினேன். மாஸ்டர்ஜி கூறிய விவரங்கள், பெங்களூரில் இருந்தபோது தான் சந்திரபாபுவுடன் பழகிய காலத்தை பற்றி ஜெயலலிதா கூறிய தகவல்கள், போலீஸ்காரன் மகளில் சந்திரபாபுவுக்கு வசனம் எழுதிய எனது தந்தை சித்ராலயா கோபு கூறிய தகவல்கள், எம்ஜிஆர்க்கு மிகவும் நெருங்கிய ஒருவர் கூறிய தகவல்கள், பத்திரிக்கையாளனாக நான் சேகரித்த தகவல்கள், எம். எஸ் வியின் நெருங்கிய உறவினர் கூறிய தகவல்கள், இன்னும் சந்திரபாபுவின் ரசிகர்கள் பலர் என்னிடம் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் சேகரித்து உங்களுக்கு தொடராக அளிக்கிறேன். காதலிக்க நேரமில்லை நகைச்சுவையான, ஜாலியான தொடராக இருந்திருக்கலாம்! இந்த தொடர் சற்று சோகத்தையும், நகைச்சுவையையும் கலந்தே கொடுக்கும். எழுதுபவர்கள் நீர் மாதிரி. Water takes the shape of the container! எழுத்தாளரும் எழுதும் விஷயத்தில் உள்ள உணர்வுகளையே பிரதிபலிப்பார்கள்! இதோ தொடங்குகிறேன்...
Release date
Ebook: 18 May 2020
English
India