Step into an infinite world of stories
உதய்சந்தர்-ஜேனட் பொற்செல்வி காதலிக்கின்றனர். ஜேனட்டின் அம்மா மேரி ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவள். ஆகையால் அவள் ஜேனட்டின் மீது ஆண்கள் மீதான வெறுப்பை ஏற்றுகிறாள். ஜேனட் கன்னிகாஸ்திரியாக போக முடிவெடுக்கிறாள். உதய் மேரியின் நன்மதிப்பை பெற்று ஜேனட்டை திருமணம் செய்து கொள்கிறான். ஜேனட் கர்ப்பமாகிறாள். கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு உலக விஷயங்கள் அனைத்தையும் கற்று தருகிறான் உதய். கர்ப்பகாலத்தில் ஜேனட் வயிற்றில் அடிபடுகிறாள். அடிபட்டதை கணவனிடம் மறைக்கிறாள். மகள் பிறக்கிறாள். பிறக்கும் குழந்தை ஊனமுற்று இருக்கிறது. ஊனமுற்ற குழந்தையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் ஜேனட். குழந்தைக்கு பலீலா என பெயர் சூட்டுகிறான் உதய். விடுமுறை போட்டுவிட்டு முழு மூச்சாய் குழந்தையை வளர்க்கிறான் உதய். இன்னொரு ஆரோக்கிய குழந்தை பெற்று கொள்ள துடிக்கிறாள் ஜேனட். மறுக்கிறான் உதய். பலீலா மிக சிறந்த ஓவியர் ஆகிறாள். கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யும் உதயா ஒரு விபத்தில் இறக்கிறான். ஊனமுற்ற ஒரு மகளுக்காக தன் வாழ்க்கையை சுருக்கிக் கொண்ட ஒரு தந்தையின் கண்ணீர் கதை இந்த நாவல்.
Release date
Ebook: 11 January 2021
English
India