Step into an infinite world of stories
'மேவாரின் சரித்திரம் ராஜபுத்திரர்களின் சரித்திரம். ராஜ புத்திரர்களின் சரித்திரம் இந்தியாவின் சரித்திரம்' என்று சொல்லுவதுண்டு. வீரக்கதைகள் கொண்ட அவர்களது சரித்திரத்தில் அன்பும், பண்பும், சாகசங்களும் ரெளத்ரமும், சிருங்காரமும், நவரசங்களும் அவற்றை சுவாரஸ்யமுள்ளதாக்கி விடுகின்றன. விஸ்தாரமான இராஜபுத்ர இதிகாசங்களின் பக்கங்களைப் புரட்டியபோது ஓரிரு பக்கங்களில் அடங்கி விடக்கூடிய உதிரியான சில சம்பவங்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதே சம்பவங்களை வெவ்வேறு சரித்திரப் பேராசிரியர்கள் வித்தியாசமான கோணங்களில் கையாண்டு எழுதியிருந்ததை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது அரசகுமாரி தாராவைக் கதாநாயகியாக வைத்து நான் எழுதிய சரித்திரக் கதைதான். இந்தப் புதினத்தின் முதல் பாகம்.
கதையைத் தொடர்ந்து எழுதினால்தான் அது முழுமைபெறும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சரித்திரப் புத்தகங்களைத் துழாவியதில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சேகரிக்க முடிந்தது. ராஜபுத்திரப் பெண்களின் முகத்திரை அணியும் பழக்கம் (பர்தா) ஒரு புதினத்தைப் படைக்கும் அளவுக்குத் தகவல்களை அள்ளித்தந்தது இருக்கட்டும், அது மேவாரின் சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது என்று அறிந்தால் என்னைப்போல் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். சரித்திர ஆதாரங்களோடு கற்பனையைச் சேர்த்துப் புனைந்ததும் இன்னொரு சம்யுக்தை எனக்குக் கிடைத்தாள்!
- லக்ஷ்மி ரமணன்
Release date
Ebook: 18 December 2019
English
India