Step into an infinite world of stories
அமரர் சாண்டில்யனின் அற்புதமான புதினம் ஒலி வடிவில் 42 மணி நேரம் ஒலிக்கும் இந்த ஒலிப்புத்தகத்தில் 40க்கும் மேற்பட்ட சிறந்த கலைஞர்கள் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்கள் இந்த நாவலைப்பற்றி திரு சாண்டில்யன் கூறுகையில் கடல் புறா கதையை புனைய என்னைத் தூண்டிய இலக்கியம் ஜயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி. கடல்புறாவை கலிங்கத்துப் பரணியின் சம்பவங்களுக்கு அடிகோறும் நூல் என்று கொள்ளலாம். ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்புகளிலிருந்து பழந்தமிழர் கடல் கடந்து செல்வதும் அந்நாடுகளின் வாணிபத்தில் மட்டுமின்றிப் போர்களிலும் கலந்து கொள்வதும் சர்வ சகஜமாக இருந்ததென்பதை அறிந்தேன். இந்த அறிவையெல்லாம் எனது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது அந்த ஆசையின் விளைவுதான் கடல் புறா.
Release date
Audiobook: 20 January 2020
English
India