Step into an infinite world of stories
கூரியர் சர்வீஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணி புரியும் பிரேமலதா, அங்கு லோடிங்மேனாக வேலை பார்க்கும் திவாகரை உள்ளூரக் காதலிக்கிறாள். தன் காதலை நேரடியாகச் சொல்லத் தயங்கி பல முறை நாசூக்காக வெளிப்படுத்துகிறாள். ஆனால், திவாகரால் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் போக மிகவும் நொந்து போகிறாள்.
பிரேமலதாவின் பெற்றோர் அவளுக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்து விட தவிக்கிறாள். சூழ்நிலை அவள் கை மீறிப் போய் விட சுரேஷ் என்னும் பெங்களூர் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். புகுந்த வீடு செல்லும் முன் கடைசியாக திவாகரிடம் தன் சொல்லி விட்டு, அழுது விடை பெறுகிறாள்.
சில மாதங்களுக்குப் பிறகு, சுரேஷ் என்னும் அந்த மாப்பிள்ளை போதை மருந்து கடத்தும் ஆசாமி என்பது திவாகருக்குத் தெரிய வர, அவனைக் காப்பாற்ற குற்றத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறான் திவாகர்.
திவாகரின் அந்த தியாகத்தை தவறாகப் பேசும் சுரேஷை லதா என்ன செய்தாள்?
அவளது உண்மைக் காதல் வென்றதா?
கதையைத் திறம்பட நகர்த்தி, இறுதியில் ஒரு கவிதை போல் முடித்திருக்கின்றார் கதாசிரியர்.
Release date
Ebook: 6 April 2020
English
India