Step into an infinite world of stories
துரோகங்களுக்குப் பல உள்ளடுக்குகள் காணப்படும் இன்னது இது என்று பிரித்தறிவது சுலபமில்லை.
அந்தமான் தீவிக்கு அருகில் இருக்கும் ஒரு தீவில் பிளாட்டின் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொன்னதைக் கேட்டு கனிம வளத் துறை சேர்ந்த பதினோரு அதிகாரிகள் விமானத்தில் செல்ல, கிளம்பிய பத்து நிமிடத்திலே வெடித்துக் கடலில் மூழ்கிவிடுகிறது. கடலில் மூழ்கிய கருப்பு பெட்டியை தேடி வந்த கப்பல் தான் இந்துஜா 2000.
கிரைம் ஆபிஸர் விவேக்கிற்கு நடந்த சம்பவம் சொல்லப்பட, விபத்திற்கான காரணத்தை அறிய விசாராணையை முடுக்கிவிடும் போது தான் பர்மாவிடம் தங்கத்தை லஞ்சமாக வாங்க ஆசைப்பட்ட சிலஅதிகாரிகள் அதில் பயணம் செய்த பத்து பேரை அத்தீவிலே கொல்ல திட்டம் போட்டது தெரியவருகிறது. இந்தியாவுடன் பர்மா அந்தத் தீவை சொந்தம் கொண்டாடி மல்லுகட்டுவதால் இந்த ஏற்பாடு. இந்தத் திட்டத்திற்கு முன்பே விமானம் வெடித்ததால் வேறு ஒரு குழுவும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.
© 2024 Storyside IN (Audiobook): 9789356040182
Release date
Audiobook: 18 January 2024
English
India