Step into an infinite world of stories
4.4
Non-Fiction
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.
நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம்.
இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
Release date
Audiobook: 30 August 2020
English
India