Step into an infinite world of stories
‘டீனா பாம்ப்பெய்-க்கு செல்கிறாள்’. இது ‘டீனாவும் அவளின் மேஜிக் கெட்டிலும்’ தொடரின் இரண்டவது புத்தகம். இந்த புத்தகத்துல புகழ்பெற்ற கடந்த காலத்திற்கு அதாவது டீனா முதல் முறையா பண்டைய ரோம் நகருக்கு பயணம் செய்றாள். கெட்டிலிலிருந்து வெளியே வர்ற நீராவி மூலமா உருவாகுற போரட்டலின் மந்திர பயன்பாட்டை அனுபவிக்கிறது டீனாவுக்கு இதுதான் முதல் முறை. இந்த போரட்டல், பண்டைய ரோமின் மொழியை பேசவும் புரிந்துகொள்ளவும் அவளுக்கு உதவியா இருக்கும். டீனா அங்க புதிய நண்பர்களை சந்திக்கிறாள். பல நூற்றாண்டு முன் செஞ்ச உணவுகளை சாப்பிடுகிறாள். அங்க இருக்குற மக்களை போலவே உடை போட்டுக்கிட்டு, உள்ளூர் கடைகள், கோவில்கள், அப்புறம் உள்ளூர் திரையரங்கிற்கு தன் நண்பர்களுடன் செல்கிறாள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரோமானிய வாழ்க்கை முறையை பற்றி டீனா தெரிஞ்சுக்குறாள். மேலும் சாகசத்தின் பிடியில் தடுமாறி போயிடுறாள். ஆனால் கடைசிவரைக்கும் பாம்ப்பெய்-யில்தான் இருந்தாங்கிறதை அவளுக்கு தெரியவேயில்ல. ஒரு காலத்தில் செழிப்பாகவும், அதிநவீனமாகவும் இருந்த ரோமானிய நகரமான பாம்ப்பெய், கி.பி 79-ல் வெசுவியஸ் மலை வெடிச்சு பேரழிவு ஏற்பட்டுச்சு, அப்போ மில்லியன் டன் கணக்கான எரிமலை சாம்பலும் பியூமிஸ் கற்களின் கீழ அந்த நகரமே புதைக்கப்பட்டுச்சு. முதல் கட்டமா அந்த பியூமிஸ் மழை சுமார் 18 மணி நேரத்திற்கு தொடர்ந்தது. அன்னைக்கு இரவிலும் அதிகாலையிலும் எரிமலைக்கு பக்கத்துல வெப்ப வாயுவும், வேகமான மின்னோட்டத்தில நகரும் எரிமலை பொருளும் அந்த நிலப்பரப்பை முழுசா மூடிடுச்சு. இரண்டாவது நாள் மாலை நேரத்திற்குள்ள வெடிப்பு முடிஞ்சு, இடிபாடுகளுடன் கூடிய வளிமண்டல மூடுபனி மட்டுமே மிச்சமிருந்தது. இப்போ இந்த பாம்ப்பெய், தெற்கு இத்தாலியின் காம்பனியா பகுதியில இருக்குற நேபிள்ஸ் விரிகுடா கடற்கரைக்கு பக்கத்துல ஒரு பரந்த தொல்பொருள் தளமாக இருக்கு. பேரழிவு ஏற்பட்ட நாளில், டீனா இந்த புகழ்பெற்ற நகருக்கு சென்று, இயற்கை பேரழிவில் சிக்கிகொள்கிறாள். இந்த நிலையில் டீனா அங்கேருந்து வெளியேறுவாளா? அவள் உயிர்தப்பிக்கொள்ள அவளது மேஜிக் கெட்டில், சரியான நேரத்தில் போரட்டலை உருவாக்கி அவளுக்கு உதவுமா ? முன்னெப்போதும் இல்லாத ஒரு சாகசம் டீனா பாம்ப்பெய்-க்கு செல்வதில் இருக்கிறது.
Translators: Meena Ganeshan
Release date
Audiobook: 3 May 2022
English
India