Masuki dunia cerita tanpa batas
முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் என்பது தமிழ் இலக்கியத்தில் தொகை நூல் வகையைச் சேர்ந்தது. இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. இவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் அடங்கிய நூல். ஒவ்வொரு மன்னரைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் அடங்கிய தொகுப்பு எனக் கருதப்படுகின்றது. இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்னர்ப் புறத்திரட்டு ஆசிரியர் நூற்றொன்பது பாக்களை மட்டும், தம் தொகை நூலில் திரட்டி வைத்துள்ளார். அவை கடவுள் வாழ்த்தாக ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்திரண்டும், சோழனைப் பற்றி இருபத்தொன்பதும், பாண்டியனைப் பற்றி ஐம்பத்தாறும் சிதைந்த நிலையில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெண்பாக்களாகும். மூவேந்தர்களின் நாடு, அரண், படைச் சிறப்பு, போர்த்திறம், வீரம், ஈகை முதலான அரிய செய்திகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. உலா வரும் அரசன்மீது காதல் கொண்டு தலைவி கூறும் ஒருதலைக் காமச் செய்திகளை, கைக்கிளைப் பொருண்மைச் செய்திகளை கொண்ட பாடல்கள் இதில் பெரும்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
ta.wikisource.org
© 2022 Ramani Audio Books (Buku audio ): 9798822630741
Tanggal rilis
Buku audio : 26 Juni 2022
Bahasa Indonesia
Indonesia