Masuki dunia cerita tanpa batas
5
Pengembangan Diri
விருப்பங்கள் வெவ்வேறானவை. சிறு குழந்தைகள் ஒவ்வொரு பொம்மையாக எடுத்து விளையாடும்; எந்த பொம்மையும் திருப்தி தராமல், சற்று நேரத்தில் அவற்றை தூக்கி வீசிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கும். அதுபோல, எதை செய்துமுடித்த பின்னும் முழு திருப்தி கிடைக்காமல், அலைபாயும் கண்களுடனும் மனதுடனும், வேறு வேறு என்று அடுத்தடுத்து எதையாவது தேடுகிறவர்களாகவே நாமெல்லாம் இருக்கிறோம்.
படிப்புதான், அதில் பெற வேண்டிய மதிப்பெண்கள்தான் கட்டாயம் பெற வேண்டியது என்று பள்ளிப்பருவத்தில் அலைந்துவிட்டு, பின் நல்ல வேலை அல்லது வெற்றி தரும் வியாபாரம் என்று மற்றொன்றைத் துரத்துகிறோம். அதன்பிறகு, பணம்தான் பிரதானம் என்று சில ஆண்டுகள் பணத்தின் பின் ஓடுகிறோம். காதலா? பெற்றோர் பார்த்துசெய்து வைக்கும், திருமணமா? பதவி உயர்வுகளா, பிரபலமடைவதா, எதில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சிதரும் என்று அலைபாய்கிறோம்.
வயது நாற்பதினைத் தாண்டியதும், இவ்வளவுநாள் என்னை கவனிக்காமல் விட்டுவிட்டாயே என்று உடல் கோபிக்க, அடுத்து அதனை சரிசெய்ய மனது கிடந்து துடிக்கிறது.
மொத்தத்தில் வாழ்க்கை முழுக்கவே அல்லாட்டம் ஆகிவிடுகிறது. ஓடி ஓடி களைத்துப் போய், ஒருகட்டத்தில் முடியாமல் மூச்சிரைத்தபடி உட்கார்ந்து விடும் விளையாட்டு வீரனைப் போல, பரிதாபமாக இருக்கிறது பலரையும் பார்த்தால்... எவையெல்லாம் பெரிது என்று தேடி அலைந்து பெற்றோமோ, அவை எதுவுமே முழு திருப்தி தரவில்லை என்று ஒரு கட்டத்தில் தெரிந்து போகிறது. இதில் வேடிக்கை என்ன வென்றால் விடாமல் அதன் பின்னும் இன்னொரு தேடலை மும்முரமாக ஆரம்பிக்கிறது மனது!
பெற்றவர்கள், பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள். படிப்பு, பணம், பட்டம், பதவி போன்றவற்றில் உச்சத்தை நாம் அடையவேண்டும் என்று. நம் விருப்பம் அறிந்து ஆசிர்வாதம் செய்கிறார்கள்.
இறைவனிடம் வைக்கப்படும் விண்ணப்பங்களிலும் மக்கள் குறிப்பாகவே இன்னது வேண்டும் என்று கேட்கிறார்கள். அதைத் தா, இதைத் தா என்று மனமுருகி வேண்டுகிறார்கள். கட்டணம் செலுத்தி, காணிக்கை கொடுத்து, ஏன் பேரம் பேசிக் கூட தங்களுக்கு வேண்டியதை கடவுளிடம் கேட்கி றார்கள். ஆனால் கேட்டதை சரியாக பெற்றுக்கொண்டதுட னாவது அவர்கள் தாகம் தீருகிறதா என்றால், அதுதான் இல்லை. எவ்வளவு மொண்டு குடித்தும், தீராத தாகம், இந்த தாகம், என்ன தாகம்!
எவ்வளவு பெற்றும் நிறையாத பை, என்ன பை! அதை எடுத்துக்கொண்டு, கால் கடுக்க, வியர்க்க விறுவிறுக்க, எல்லா இடமும், எல்லோரிடமும் சென்று வந்தாகிவிட்டது. ஆனாலும் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியவில்லை.
வல்லமை தாராயோ...
சிவசக்தி...
என்று பாரதி கேட்பது போல... நாமும் நம் இறைவனிடம் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எதற்கான வல்லமையை எனக்குத் தா கேட்பது? இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில்?
படித்துப் பாருங்கள். வாழ்த்துக்கள்
சோம வள்ளியப்பன்
அபிராமபுரம், சென்னை-18.
Tanggal rilis
buku elektronik : 15 September 2020
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia