Masuki dunia cerita tanpa batas
Shivaji Bhonsale I, also referred to as, Chhatrapati Shivaji, was an Indian ruler and a member of the Bhonsle Maratha clan. Shivaji carved out his own independent kingdom from the declining Adilshahi sultanate of Bijapur that formed the genesis of the Maratha Empire. In 1674, he was formally crowned the Chhatrapati of his realm at Raigad Fort. Over the course of his life, Shivaji engaged in both alliances and hostilities with the Mughal Empire, the Sultanate of Golkonda, Sultanate of Bijapur and the European colonial powers. Shivaji's military forces expanded the Maratha sphere of influence, capturing and building forts, and forming a Maratha navy. Shivaji established a competent and progressive civil rule with well-structured administrative organisations. He revived ancient Hindu political traditions, court conventions and promoted the usage of the Marathi and Sanskrit languages, replacing Persian in court and administration. Shivaji's legacy was to vary by observer and time, but nearly two centuries after his death, he began to take on increased importance with the emergence of the Indian independence movement, as many Indian nationalists elevated him as a proto-nationalist and hero of the Hindus. Please Listen to Gnanasambandan's audio of Heroic History of Chhatrapati Shivaji.
பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே, மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். போன்சலே மராத்திய குலத்தவரான சாகாஜிபோன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். தக்காண சுல்தான்கள் மற்றும் தில்லி மொகலாயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாகாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர். இந்து சுயராஜ்ஜியத்தின் (இந்துக்களின் சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போன்சலே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கு இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களுக்கு யுத்தத்தின்போது கொடுமை செய்தல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச் சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது. இத்தகைய சிறப்பு மிக்க சத்திரபதி சிவாஜி ராஜே போசுலே பற்றி பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் விரிவாக விவரிக்கிறார்.
Tanggal rilis
Buku audio : 12 Juni 2022
Bahasa Indonesia
Indonesia