Lyric & Poetry
திருப்பாவை தமிழன்னையின் பக்தி கையெழுத்து எனலாம். காலம் யுகம் யுகமாய் கபளிகரம் செய்து அழித்த பல பொருட்களில் திருப்பாவையின் உட்பொருள் அழியாத ரீங்காரமாக உள்ளது. சூடான வெண்பொங்கலை பூவரச மர இலையில் உண்ணலாமே என்ற தருணத்திற்க்காக மணக்கால் (திருச்சி) கிராமத்தில் விடியலில் எழுவேன். ராஜ லஷ்மி டீச்சர் வீட்டில் நாலு நாலு பேராக ஆண்கள் தனி பெண்கள் தனி என அமர்ந்து கொள்வோம். அர்த்தம் புரிகிறதோ இல்லையோ ஒரு கோரஸ் மெட்டில் அரைபடாமலே மெஷினில் சுழல ஆரம்பிக்கும் ரைஸ்மில் தானியங்களைப் போல, அந்தப் பசும் காலைப்பொழுதில் ஆண்டாளின் கவிதை வாக்கியங்கள் இதய சில்லுகளில் சுழல ஆரம்பித்தவை இன்றும் என் 58 வயதிலும் கவிதைப் பொங்கலாக ருசிக்கின்றதை, இக்கால குழந்தைகளுக்கும் எடுத்து விளக்குவது ஒரு பக்கம் இருக்க, வாய்விட்டு பாடவும் ஊக்கப்படுத்தவும் ஆங்காங்கு உள்ள அடுக்குமாடி குடும்பங்கள், சாக்லேட் பரிசளித்தேனும் தமிழ் கடத்த வேண்டும். இணையலாம். எல்லாமே இணையம் என்றாலும் இதயம் உருக ஒரு குழுவாக கோரஸ் இசைத்துப் பாடியதுதான் கூச்சம் மறந்து குளத்தில் நீராட முதல் குளிர் விட்டுப்போனது போன்ற துவக்கம் கொடுத்தது. தமிழ் சுவை உணர ஆண்டாள் அன்பு குழைய அனுபவித்த தமிழை பாட மார்கழி அதிகாலை வரைக்கும் காத்திருக்க வேண்டுமா என்ன, இன்றே வாய் விட்டுப் பாட ஆரம்பிப்போம். கானம் கலந்துண்போம்!
Release date
Ebook: April 24, 2023

Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
International