Step into an infinite world of stories
Religion & Spirituality
தங்கமும், வைரமும் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதுதான். இருந்தும் ஒன்றை உருக்கி வெவ்வேறு வடிவத்திலும், அளவிலும் நகைகளாகவும், மற்றதை வெவ்வேறு கோணங்களில் பட்டை தீட்டியும், வெவ்வேறு இடங்களில் பொருத்தியும் அழகு பார்க்கிறோம். அதுபோல நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமான இராமாயண காவியத்தை, வால்மிகி முனிவரின் மூலச் செய்யுட்களில் சிலவற்றை எடுத்தாட்கொண்டு, வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தப் படைப்பு. ராம ராஜ்ஜியம் நமக்கு வேண்டும் என விரும்புவோர் அனைவருமே, முதலில் காவியத் தலைவன் இராமனைப் போலத் தனது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.
இந்திய விமானப் படையின் வானிலைப் பிரிவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றிய பின் ஒய்வு பெற்ற மூல ஆசிரியர் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கு, 1989-ம் வருடம் அவரது அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில், அவரது விருப்பங்களை நன்கு புரிந்து கொண்ட சக ஊழியர்கள், ஒரு வால்மிகி ராமாயணம் புத்தகம் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர். அந்த நூலை வான்மிகி முனிவர் 24,000 செய்யுட்கள் வடிவில் 500 அத்தியாயங்களில் இயற்றியுள்ளார். அதை ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயமாக படித்து, தனது குறிப்புகளையும் எழுதி வந்தார். அப்படி அவர் அந்த நூலை மூன்றாம் முறையாகப் படித்து வரும் போது, வால்மிகி முனிவர் எந்தக் காரணத்தை முன்னிட்டு ராமாயணத்தை எழுதியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியதை “Rama: a Model for Mankind” என்ற தலைப்பில் தனது ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்குப் பொருத்தம் என்று தோன்றிய சில மூல சம்ஸ்க்ருத சுலோகங்களை தேர்ந்தெடுத்து, அதை ஆங்கிலத்தில் விளக்கி அதன் தொடர்பான இராமாயண நிகழ்ச்சிகளையும் விவரித்துள்ளார்.
அந்த மூல நூலை நான் படிக்க நேர்ந்தபோது, நான் பெற்ற இன்பத்தைத் தமிழ்ஹிந்து இணையதள வாசகர்களுக்கும் மொழியாக்கம் செய்து அளிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது. உடனே மூல ஆசிரியரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு அதற்கு அவர் அனுமதியைக் கேட்டேன். அவரோ, "பகீரதன் தனது முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வதற்கு என்று கங்கை நதியைக் கொண்டு வந்தான்; நாம் எவருடைய அனுமதியைப் பெற்று கங்கை நீரைப் பருகுகிறோம் என்று போஜ மகராஜா சம்பு ராமாயணத்தில் சொல்வதைச் சொல்லி, தாங்கள் மொழியாக்கம் செய்ய அனுமதி அளிப்பதற்கு நான் யார்? ராமாயணம் மக்கள் அனைவரின் சொத்து. தங்கள் பணியைத் தாராளமாகச் செய்யுங்கள்" என்று மிக்க பெருந்தன்மையுடன் ஆசீர்வதித்தார்.
இந்த மொழியாக்கத்தில் நூற்றுக்கு தொண்ணூற்றியொன்பது பகுதி, மூலத்தில் உள்ளதை மொழிபெயர்த்து நான் எழுதியுள்ளேன்.
S. ராமன்
Release date
Ebook: February 5, 2020
English
International