Step into an infinite world of stories
Eliya Tamilil Pallavar Varalaaru (Moolam: Rasamanikkanar): An Aurality Tamil Audiobook Production
எளிய தமிழில் பல்லவர் வரலாறு (மூலம்: இராசமாணிக்கனார்) மா.இராசமாணிக்கனாரின் மூல நூல் இந்தத் தலைமுறையினருக்குப் புரியும் வகையில் இக்காலத் தமிழ்நடையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. பல்லவர்களின் வரலாற்றை முழுவதுமாக அறிந்துகொள்ள இதுபோன்ற இன்னொரு நூல் இல்லை எனலாம். சோழர்களுக்கு முன்பாகத் தமிழ் நிலத்தின் பெரும்பரப்பை, ஏறத்தாழ 600 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். சோழர்களின் காலத்தில் தமிழகக் கட்டடக் கலை உச்சம் தொட்டது என்றாலும், அதற்கான அடித்தளத்தை ஆழமாக இட்டவர்கள் பல்லவர்களே. தமிழ் நிலத்தில் முதன்முதலில் கருங்கற்கள் கொண்டு கோவில் எழுப்பிய பல்லவர்கள், செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்களைக் கருங்கற்களால் புதுப்பிக்கவும் செய்தார்கள். இதனைச் சான்றுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர். பல்லவர் கால நீர் மேலாண்மை, காஞ்சி மாநகரின் அருமை, சைவ – வைணவ மதங்களின் எழுச்சி, சமண – பௌத்த மதங்களின் வீழ்ச்சி, பல்லவர்கள் மேற்கொண்ட போர்கள், அதன் விளைவுகள், அக்காலப் பஞ்சங்கள்; ஓவியம், சிற்பம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றிற்குப் பல்லவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அக்கால சமூகப் பொருளாதார நிலைகள், பல்லவர்களின் வீழ்ச்சி போன்றவை இந்தப் புத்தகத்தில் அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விவரிக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் அச்யுதன் ஶ்ரீ தேவ் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882401237
Release date
Audiobook: September 1, 2024
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International