Step into an infinite world of stories
Fantasy & SciFi
“டேய்... மகிமாடா...!” “சரி... இப்படி குடு!” “அவளுக்கு நிச்சயமாய்டுச்சில்லே?” “ப்ச்... அதப்பத்தி அப்புறம் பேசலாமே... முதல்ல அவகிட்டே பேசிடறேன்!” ரிஷியிடமிருந்து செல்ஃபோனை பறித்து காதில் ஒட்டவைத்துக் கொண்டான். “ஹாய் டியர்...!” “.....” “பேசாதே... நான் ரொம்ப கோபமாயிருக்கிறேன்!” “.....” “பின்னே என்ன? ரெண்டு நாளாய்டுச்சி... நீ என்கிட்டே பேசி. நான் ட்ரை பண்ணும்போதெல்லாம் செல் ஆஃப் பண்ணியிருக்கு. என்னை ரொம்ப துடிக்க வைக்கிறே மகிமா!” “.....” “சும்மா... ஃபோன்லே கிஸ் பண்ணிட்டா சமாதானமாய்டுவேனா? நேர்ல வா!” “.....” “ஓக்கே... பிரார்த்தனாவா? நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன். ஈவ்னிங் ஸ்பென்சர் வாசல்ல நில்லு... ஓக்கே... ஓக்கேடா செல்லம்!” ரிஷி கண்கள் சுருங்கப் பார்த்தான்“மாப்பிள்ளே... எனக்கு இப்பவே ஒண்ணு தெரிஞ்சாகணும்!” “என்ன?” “டூ யூ லவ் ஹர்?” “யாரைப் பத்தி கேக்கறே?” “மகிமா!” “சேச்சே...! லவ்வாவது மண்ணாவது. அதுக்கெல்லாம் ஏதுடா நேரம்? ரிஸ்க்! லவ் பண்ணா..., அவ கூப்பிடறப்பவெல்லாம் ஓடணும். கொஞ்சம் லேட்டாப் போனாலும் சண்டை வரும். சமாதானப்படுத்த நிறைய பொய் சொல்லி கொஞ்சணும். அவளுக்கு என்னப் பிடிக்கும்னு தெரிஞ்சு கடை கடையா ஏறி இறங்கி வாங்கித்தரணும். எதுக்கிந்த டென்ஷன்?” “அப்ப மகிமாவை லவ் பண்ணலே!” “நிச்சயமா இல்லே! அவளுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணமாகப் போகுது!” “அப்புறம் எப்படி மாப்பிள்ளே... அவ இன்னமும் உன்னோட சுத்திக்கிட்டிருக்கா? - கட்டிக்கப்போறவனுக்கு தெரிஞ்சா பிரச்சனையாச்சே?” “என்னைப் பிடிச்சிருக்கு. என் அப்ரோச் பிடிச்சிருக்கு. விட மனசு வரமாட்டேங்குது அவளுக்கு. இன்னொரு விஷயம் தெரியுமா? கட்டிக்கப் போறவன் கல்ஃப்ல இருக்கான். லவ் மேரேஜ். இன்டர்நெட்ல சாட்டிங் பண்ணி வளைச்சுப்போட்டிருக்கா... மேரேஜுக்குப் பிறகு கல்ஃப்லேயே செட்டிலாய்டப்போறா...” “அப்புறம் எப்படிடா உன்கூட...!” “டேய்... டேய்... இது உனக்கே ரொம்ப அதிகமா தெரியலே? நாம் பழகறதே இப்படிப்பட்ட அல்ட்ரா மாடர்ன் கேர்ள்ஸோடதானே? இப்ப என்ன புதுசா ஆச்சர்யப்படறே?” “உனக்கு உடம்பெல்லாம் மச்சம்டா மாப்பிள்ளே!” “இருந்துட்டுப் போகட்டும்!“அப்புறம்... இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே...” “என்ன?”, “வீட்லே எனக்கு மூக்கணாங்கயிறு போட பொண்ணை வலைவீசி தேடறாங்க!” “வெரிகுட் சிட்டியிலேயா? வில்லேஜ்லேயா?” “வில்லேஜ்லேதான் பார்க்க சொல்லியிருக்கேன். அப்பதான் நம்ம வில்லங்கமெல்லாம் தெரியாமலிருக்கும் பாரு!” “எனிவே... பெஸ்ட் ஆஃப் லக்” “சரி... உனக்கெப்போ கல்யாணம்?” “டெய்லி எங்க வீட்டு பெரிசுங்க தொல்லைப் பண்ணிக்கிட்டுதான் இருக்குதுங்க. எனக்கென்னவோ... கல்யாணம், மனைவின்னு புதுசா ஒரு பந்தத்துல மாட்டிக்க மனசு வரமாட்டேங்குது. குழந்தை, குடும்பம்னு ஒரு வட்டத்துக்குள்ளே சிக்கிக்கிட்டு, எல்லாத்துக்கும் கவலைப்பட்டுக்கிட்டு... வீண் பிரச்சனையத் விலை கொடுத்து வாங்கி... நம்ம சந்தோஷத்தை காத்தாடி மாதிரி பறக்க விட்ருவோமோன்னு கொஞ்சம் பயமாயிருக்கு!” “நமக்கு வீட்டு சாப்பாடு பிடிக்காதுதான். தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டாலும் வீட்லே வைக்கிற காரமான மிளகு ரசத்துக்காக மனசு ஏங்கதான் செய்யுது. ரிஸ்க் எதிலே இல்லே மாப்பிள்ளே? லகானை எப்பவும் உன் கையிலேயே வச்சுக்கிட்டா எதுவும் பிரச்சனையில்லே!” “இப்ப எதுக்கு அதெல்லாம்?” போன் அலறியது
© 2024 Pocket Books (Ebook): 6610000510740
Release date
Ebook: January 13, 2024
Listen and read without limits
Enjoy stories offline
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International