ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
நான், உயிராய் நேசித்து வணங்கித் துதிக்கும் என் தந்தை... உலகிற்கே அம்மையப்பராய்த் திகழும் எம்பெருமான் ஈசனின் உத்தரவின்படி, என் சிறு வயது முதலே நான் உருகித் துதித்த, மனதிற்குள் மிக நெருக்கமாய் உணர்ந்து வணங்கிய, "சின்னண்ணா” என அன்புடன் நான் அழைக்கும், என் மானசீகத் தந்தையாம் ஸ்கந்தப் பெருமானையும், "பெரியண்ணா " என்று தொழும் விக்னேஷ்வரப் பெருமானையும் பற்றி நான் படித்த, உணர்ந்த, செவிவழிச் செய்தியாகக் கிடைத்த, புராணங்களில் போதிக்கப்பட்ட அற்புதச் சரிதத்தை, உங்களுடன் பகிர்வதில் பெருஉவகை அடைகிறேன்!
சகல உயிர்களையும் உருவாக்கியவரும். அந்தமிலாதொரு ஆதியாகவும்... பஞ்சபூத சொரூபமாகவும்... அனைத்திற்கும் காரணகர்த்தாவும்... எவரிடமிருந்து பிரபஞ்சங்கள் தோன்றி ஒடுங்குகிறதோ அவரும்... ஞானத்தை அளித்துத் திருவருள் அளிப்பவரும்... அளவிட முடியா ஆனந்தத்தை நல்குபவரும்... மூன்று வேதங்களுக்கு மூலகாரணமாகவும், அவற்றை முகங்களாகவும் கொண்டவரும்... மூவுலகையும் ஆனந்த மயமாக்கும் அற்புதப் புருஷராகவும். முக்காலத்திலும் அழிவில்லாது, உலகத்திற்கே மகாபிரபுவானவரும்... ஆதி அந்த மின்றி முடிவற்ற பிரம்மம் எனப்படுபவருமான எம்பெருமான் மகாதேவரிடம் இருந்து வெளிப்பட்ட தேஜஸ் எனப்படும் அக்னிப் பொறிகள் இணைந்து, அக்னியின் உருவமாய்த் தீமைகளை அழித்து நன்மை பயப்பவருமாக, வீரம், விஜயம், தைர்யம், ஞானம், அருள், ஆற்றல், வீர்யம், பகை கடிதல், கருணை, நேர்மை என, அனைத்துக் குணங்களும் நிரம்பிய ஸ்ரீ கந்தப் பெருமானின் திருஅவதார நிகழ்வையும், அவருடைய சரிதத்தின் பெருமையையும்...
விக்னங்கள் அகற்றும் விக்னராஜனாய் விளங்கும்... துஷ்டச் செயல்களையும், இடையூறுகளையும் நீக்கும் ஏக தந்தராய்த் திகழும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் திரு அவதாரச் சிறப்பையும் உங்கள் முன் அளிப்பதில், மகிழ்ச்சியில் மனம் விம்மித்தணிகிறது. சிவபெருமானுடைய நெற்றிக்கண் தேஜஸாம் அக்னியிலிருந்து பிறந்தவரும்... சரவணப் பொய்கையில் தோன்றிய வரும்... உமாதேவியின் மைந்தராய்ப் பிரகாசிப்பவரும்... அசுரர்களை அழிக்க அவதரித்த சூரசம்ஹாரரும்... போர் முனையில் வீரதீரம் புரிந்த கதிர்வேல் முருகனாய் ஆற்றல் வாய்ந்தவரும். சக்திவேல், வஜ்ராயுதம் முதலிய பெரும் ஆயுதங்களை ஏந்தியவரும் ஆகிய கார்த்திகேயனின் அருட்சரிதம் கூறித் தமிழில் கந்த புராணம் உரைத்த கச்சியப்ப சிவாச் சாரியாரின் திருப்பாதங்களைப் பணிந்து, இச்சரிதத்தை உங்கள் முன் அளித்திருக்கிறேன்.
தமிழர் தெய்வம் என்று போற்றப்படும் குமரக்கடவுள், தமிழின் வடிவமாகவே திகழ்கிறார். அதனாலேயே, தமிழ் மொழியும் தெய்வத் தமிழாக விளங்குகிறது. அதனாலேயே ஞால் மளந்த மேன்மை தெய்வத்தமிழ் என்கிறார் சேக்கிழார்.
ஞானம், சக்தி, ஆத்மா இவற்றின் வடிவாய் விளங்கும் சுப்ரமணியராய்... பகைவர்களைப் பூண்டோடு அழிப்பதில் ஸ்கந்தனாய்... நெருப்பில் தோன்றியதால் அக்னிபூதனாய்... கார்த்திகை நட்சத்திரத்தின் மைந்தரானதால் கார்த்திகேயனாய்.., வைகாசி விசாக நாளில் இனித்ததால் விசாகனாய்... ஆறு முகங்களைக் கொண்டதால் சண்முகனாய். பச்சிளம் பாலகனாக ஒளிர்வதில் குமரனாய்... நாணல் புதரில் தோன்றியதால் சண்முகனாய்... வேலாயுதம் ஏந்தியதால் கதிர்வேலனாய்... சித்தர் குகையில் ஒளிர்ந்த குகனாய்... வண்ண மயிலை வாகனமாய்க் கொண்டதில் சிகி வாகனனாய்... எங்கும் வியாபித்து அருள்வதால் முருகப் பெருமானாய் .... கங்கையைத் தாயாய் வரித்ததில் காங்கேயனாய்... அழகின் திருஉருவாய் அருள்வ தால் சிங்காரவேலராய்... தேவர்களைக் காத்ததால் தேவ சேனாபதியாக விளங்கும் எம் ஆதர்ச சகோதரர் ஸ்ரீ கந்த சுவாமியின் திருப்பாதார விந்தங்களை வணங்கி, இந்தச் சரிதத்தைத் துவங்குகிறேன்!
முருகன் - முருகன் எனும் சொல்லுக்கு, அழகன் என்று பொருள். அழகு என்பதன் உட்பொருள், அன்பு, கருணை, வீரம், மனோபலம், பக்குவம், நேர்மை இவற்றை அருளும் நிலை என்பதை, அந்த இறை சக்தியிடம் உணர்கிறேன் நான்!
மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலமும், முருகனின் இருப்பிடம் என்று ஆன்றோர் கூறுவர். மலை போல் உயர்ந்த உள்ளமும், கந்தப் பெருமானின் அகப்பீடம் என்பதை உணர்ந்தவர் கோடி!
அப்பா! அம்மா! ஈசனே... அன்னையே! நீங்கள் இருவரும் என்னை ஆசிர்வதித்து, எம் இரு விழிகளாக விளங்கும், இரு இறை சகோதரர்களின் உன்னதச் சரிதத்தை, அற்புத வரலாற்றை, எளிமையாய்... எனக்குத் தெரிந்தவரையில் - நான் அறிந்தவரையில் தொகுத்து வழங்க, அருள்புரிய வேண்டுகிறேன்!
இந்தச் சரிதம் பிறக்க உதவிய என் அம்மையப்பருக்கும், சிறக்க உதவிய கந்தபுராணம், விநாயகர்புராணம், அறுபடை வீடு முதலான ஆன்மிகக் களஞ்சியங்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்!
நட்புடன் - உமா பாலகுமார்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย