Step into an infinite world of stories
History
எகிப்து நாடு ஆப்பிரிக்காவில் உள்ளது; நைல் நதிக்கரையில் உதித்த இந்த நாகரீகத்தில் வேறு எங்கும் காணாத புதுமைகள் உண்டு. இறந்த மன்னர்களை புதைப்பதற்காக பிரம்மாண்டமான பிரமிடு என்னும் கட்டிடங்கள், சித்திர எழுத்துக்கள், இறந்தோரின் சடலங்களை மம்மி என்னும் முறையில் பாதுகாத்தல் முதலியன சிறப்பு அம்சங்கள். ஆயினும் இந்துக்களுக்கும் எகிப்தியர்களுக்கும் தொடர்பு இருந்ததைக் காட்டும் சில அதிசய விஷயங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். 5000 ஆண்டுப் பழமை உடைய இந்த நாகரீகத்தைப் பற்றி 2017 பிப்ரவரி முதல் தொடர்ந்து 26 கட்டுரைகளை எழுதினேன். வேறு 4 கட்டுரைகள் அதற்குப் பின்னர் தனித்தனியே எழுதப்பட்டன. ஒரு புஸ்தகம் என்ற முறையில் எழுதாமல் தனித்தனியே எழுதிய கட்டுரைகள் என்பதால் மீண்டும் மீண்டும் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்; தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொண்டு படித்து மகிழ வேண்டுகிறேன்.
Release date
Ebook: 7 July 2022
English
India