வேதாவின் இருதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து பின் ரத்தத்தை இறைக்க ஆரம்பித்தது. “எ... என்ன சொ... சொன்னீங்க... சீனிவாசன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரா...?” “ஆ... ஆமா...” “என்னாச்சு...?” “பஸ்ஸை விட்டு இறங்கி ஆபீஸ்க்கு போகிற வழியில... யாரோ ஒரு பொண்ணை ரெண்டு ரெள ங்க கலாட்டா பண்ணிகிட்டு இருந்திருக்காங்க... சீனி சன் அவங்களை கண்டிக்கப்போக கத்தியால் குத்திட்டாங்க...” வேதாவுக்கு மார்பை அடைத்தது. “க... க... கத்தியால் குத்திட்டாங்களா...?” “ப்ளீஸ்! சீக்கிரம் வாங்க...! சீனிவாசன் உங்க பேரைச் சொல்லித்தான் முனகிட்டிருக்கான்...” “ஏதும்... ஆபத்தில்லையே...?” “டாக்டர் ஒண்ணும் சொல்லலை...” “இப்ப... வர்றேன்...” ரிஸீவரை வைத்து விட்டு அரை நிமிஷத்திற்கு முன்னால் இருந்த சந்தோஷமெல்லாம் தொலைந்து போயிருக்க மானேஜரின் அறையை நோக்கி ஓடினாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட நந்தகோபால் ரிவால்விங் நாற்காலியினின்றும் அதிர்ந்து போய் எழுந்தான். “வாங்க... என் கார்லேயே போயிடலாம்...” கிளம்பினார்கள்தாம்பரம் ஜி ஹெச். நல்ல வெய்யிலில் நிறைய அவுட் பேஷண்ட்களோடு கசகசப்பாய் தெரிய காஸுவால்டி வார்டுக்கு முன்னால் சீனிவாசன் நண்பன் சதானந்தம் கலவர முகமாய் நின்றிருந்தான். பார்த்ததும் ஓடி வந்தான். “ஆபரேஷன் நடந்திட்டிருக்கு...” வேதா பேச்சு வராமல் திணற நந்தகோபால் கேட்டான். “டாக்டர் என்ன சொன்னார்...?” “கத்திக்குத்து கல்லீரல் வரைக்கும் இறங்கிட்டதாகவும்... ஒரு ஆபரேஷனை பண்ணிட்டுத்தான் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்ன்னு சொல்லிட்டார்.” “கத்திக்குத்து சம்பவம் எங்கே நடந்தது...?” “சிட்கோ ஸ்டாப்பிங்கில் இறங்கி நானும் சீனிவாசனும் எங்க ஆபீஸுக்கு போகிற ரோட்ல நடந்துகிட்டிருந்தோம். வழியில ஒரு பூக்கார பொண்ணை துரத்திகிட்டு ரெண்டுபேர் பைக்ல வந்து வம்பு பேசிட்டிருந்தாங்க... ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ஏரியாவில் பைக்ல வந்தவங்க துணிச்சலா அந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சு இழுக்கவும்... சீனிவாசன் சூடாகி நியாயம் கேக்கப் போனான். ரெண்டு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டான்... ரெண்டு பேர்ல ஒருத்தன் கையில் மடக்கி வெச்சிருந்த பேனாக் கத்தியை விரிச்சு... சீனியோட வயத்துல் குத்திட்டான்” “குத்தினவங்களை பிடிச்சீங்களா...?” “நான் முயற்சி பண்ணினேன். ஆனா முடியலை... கத்தியைக் காட்டிகிட்டே பைக்ல ஏறி பறந்திட்டாங்க...” “பைக் நெம்பரைப் பார்த்தீங்களா?” “ரத்தமா கீழே கிடக்கிற சீனிவாசனை அள்ளி ஹாஸ்பிடலுக்கு உடனே கொண்டு போகணும்ங்கிற... ஞாபகம்தான் இருந்ததே தவிர வேற எந்த ஞாபகமும் எனக்கு இல்ல...” “போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங் ளாஇன்ஸ்பெக்டர் உள்ளே இருக்கார்...” வேதா தளர்ந்து போய் அங்கே சுவரோரமாய் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள நந்தகோபால் வார்டுக்கு முன்னால் நின்றிருந்த இன்ஸ்பெக்டரை நோக்கிப் போனான்.
© 2024 Pocket Books (buku elektronik ): 6610000510849
Tanggal rilis
buku elektronik : 13 Januari 2024
Tag

Masuki dunia cerita tanpa batas
Peringkat keseluruhan berdasarkan peringkat 4
Unduh aplikasinya untuk bergabung dalam percakapan dan menambahkan ulasan.
Bahasa Indonesia
Indonesia